வடிவேலுவுக்கு போலி டாக்டர் பட்டம்.. சர்ச்சைக்கு அண்ணா யூனிவர்சிட்டி கொடுத்த பதில்
டாக்டர் பட்டம்
தற்போதைய காலகட்டத்தில் டாக்டர் பட்டம் எல்லாம் வியாபாரம் போல ஆகிவிட்டது என மக்கள் கமெண்ட் செய்யும் அளவுக்கு தான் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவின் பல நடிகர்கள் இதற்கு முன்பு டாக்டர் பட்டம் வாங்கி இருக்கிறார்கள். ஆனால் தற்போது காமெடியன் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட சிலருக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் போலி என தெரியவந்திருக்கிறது.
International Anti-Corruption and Human Rights Commission என்கிற ஒரு அமைப்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சி நடத்தி அதில் வடிவேலு, தேவா உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தனர். பரிதாபங்கள் சேனல் புகழ் கோபி மற்றும் சுதாகர், விஜய் டிவி ஈரோடு மகேஷ் உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் கொடுக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகம் போலிஸில் புகார்
போலியான ஒரு டாக்டர் பட்டத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் கொடுத்தது சர்ச்சையான நிலையில் அது பற்றி தற்போது போலீஸ் புகார் அளித்து இருப்பதாக யூனிவர்சிட்டி தரப்பில் தெரிவித்து இருக்கிறார்கள்.
விருது விழா என்று சொல்லி தான் ஆடிட்டோரியத்தை அரை நாள் வாடகைக்கு எடுத்தார்கள், அதில் இப்படி போலி டாக்டர் பட்டம் கொடுக்க போகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது எனவும் கூறி உள்ளனர்.
போலீஸ் புகார் அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில், சட்டப்படி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இருக்கின்றனர்.
தாடி மீசை எப்படி? சாரா அலி கான் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக்

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

”அடிக்காதீங்க அண்ணா” நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கொடூரம் - 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் IBC Tamilnadu

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
