அண்ணாத்த படம் உலகம் முழுவதும் எங்கு வெற்றி, எங்கு தோல்வி, முழு ரிப்போர்ட் இதோ
அண்ணாத்த ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம். இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
ஆனால், ஆரம்பத்திலிருந்தே இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் பரவ தொடங்கியது, அதே நேரத்தில் குடும்பங்கள் இந்த படத்தை கைவிடவில்லை.
ஆம், பேமிலி ஆடியன்ஸ் தொடர் வருகையால் அண்ணாத்த படத்தின் ஓப்பனிங் பிரமாண்டமாக இருந்தது.
அதே நேரத்தில் அண்ணாத்த படத்திற்கு வில்லனாக மழை வந்தது, ஆம், கனமழை காரணமாக பல இடங்களில் ஷோக்கள் கேன்சல் கூட ஆனது.
அண்ணாத்த தற்போது உலகம் முழுவதும் ரூ 150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, ஒரு சிலர் ரூ 200 கோடியையும் தாண்டியதாக கூறுகின்றனர்.
இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, சரி அண்ணாத்த எங்கு வெற்றி தோல்வி என்பதை பார்ப்போம்.
தமிழகத்தில் அண்ணாத்த ரூ 90 கோடி வசூலை கடந்துள்ளது, சன் பிக்சர்ஸ் நேரடியாக இப்படத்தை ரிலிஸ் செய்துள்ளதால், அவர்கள் எதிர்ப்பார்த்த ஷேர் கிடைத்து ஹிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.
தெலுங்கில் அண்ணாத்த படுதோல்வியடைந்துள்ளது.
கர்நாடகாவில் இப்படம் ஹிட் அடித்துள்ளது, ரூ 10 கோடி வரை அங்கு வசூல் செய்துள்ளது.
கேரளாவில் அண்ணாத்த படுதோல்வியை சந்தித்துள்ளது.
ஓவர்சீஸில் முன்பு ரூ 30 கோடி வரை வியாபரம் ஆனது, ஆனால், கொரோனா பிறகு ரூ 15 கோடி வரை இது குறைந்ததாக கூறப்படுகின்றது. அண்ணாத்த வெளிநாடுகளில் ரூ 18 கோடி வரை ஷேர் வர, கண்டிப்பாக அங்கும் ஹிட் தான்.