ரஜினியின் அண்ணாத்த பட முழு வசூல்- மழையால் சுத்தமாக குறைந்த பாக்ஸ் ஆபிஸ், தற்போதைய நிலவரம்
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் கோலாகலமாக தீபாவளிக்கு வெளியானது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வந்து படம் பார்த்தனர்.
பிரபலங்கள் பலரும் திரையரங்கிற்கு வந்து ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் பார்த்தார்கள். முதல் நாளில் இருந்து வசூலில் படம் மாஸ் காட்டிவர இடையில் மழை வந்து அனைத்தையும் கெடுத்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை அதிகமாகி வர மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே படத்தின் வசூல் அப்படியே குறைந்துள்ளது.
தற்போது வரை தமிழகத்தில் படம் ரூ. 83ல் இருந்து ரூ. 84 வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் படத்தின் ரூ. 200 கோடி தாண்டிவிட்டதாக தகவல் வர ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.