அண்ணாத்த படத்தால் தயாரிப்பு நிறுவனத்திற்கு இத்தனை கோடி லாபமா?- இதுவரையிலான மொத்த வசூல் விவரம்
ரஜினியின் அண்ணாத்த ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு படம். சிவா இயக்கிய இப்படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
கிராமத்து கதை பின்னணியில் படம் விஸ்வாசம் போல ஹிட்டடிக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். படத்தில் ரஜினியுடன் 80, 90களில் ஜோடிபோட்ட குஷ்பு, மீனா எல்லாம் படத்தில் நடித்திருப்பது இன்னொரு ப்ளஸ்ஸாக பார்க்கப்பட்டது.
ரஜினிக்காக எஸ்பிபி அவர்கள் கடைசியாக பாடிய பாடலாக அண்ணாத்த படம் அமைந்துவிட்டது.
படம் ரிலீஸ் ஆரம்பத்தில் செம வசூல் வேட்டை நடத்தியது, 2 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டியது, தற்போது உலகம் முழுவதும் ரூ. 150 கோடி வசூலை நெருங்கி வருகிறதாம்.
தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 85 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மழை தாக்கம் பட வசூலை அப்படியே 5வது நாளில் இருந்து குறைத்துவிட்டது.
இந்த வார இறுதியில் கண்டிப்பாக பட வசூல் அதிகமாகும் என கணிக்கப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் இதுவரை வந்த வசூலிலேயே அண்ணாத்த படத்தால் தயாரிப்பு குழுவிற்கு ரூ. 17 கோடி லாபம் என கூறப்படுகிறது.