சன் டிவியில் புதியதாக களமிறங்கும் தொடர்.. வெளிவந்த முதல் புரொமோ
சன் டிவி
சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி சன் டிவி. கயல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள் என தொடர்ந்து நிறைய சீரியல்கள் சன் டிவியின் டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகிறது.
தற்போது சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிய சுந்தரி தொடர் தற்போது முடிவுக்கும் வர இருக்கிறது, கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது.
புதிய தொடர்
சுந்தரி முடிவது ரசிகர்களுக்கு வருத்தம் என்றாலும் இப்போது புதிய தொடர்கள் களமிறங்குவதால் ரசிகர்கள் புதிய சீரியலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்படி தற்போது சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடரின் புரொமோ வெளியாகியுள்ளது.
அன்னம் என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடருக்கு முன்பு உன்னை சரண் அடைந்தேன் என்று தான் பெயர் வைத்துள்ளனர். இந்த தொடரை அய்யன் மூமி மேக்கர்ஸ் தான் தயாரித்துள்ளனர். இதோ புதிய தொடருக்கான புரொமோ,

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu
