அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம் சாமியார் அம்மாவை சிந்தாமணி ஏற்பாடு செய்து, அவரை விஜயா வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அந்த சாமியார் இந்த வீட்டில் மீனா இருந்தால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து என கூற விஜயா அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

இதனால், உடனடியாக மீனாவை இந்த வீட்டிலிருந்து வெளியேற சொன்னார். ஆனால், இதெல்லாம் மூடநம்பிக்கை என முத்து, அண்ணாமலை ரவி ஆகியோர் கூறினார்கள். இதனால் விஜயாவால் மீனாவை வீட்டில் இருந்து வெளியேற்ற முடியவில்லை.
மருத்துவமனையில் அண்ணாமலை
இந்த நிலையில், வரும் வாரம் சிறகடிக்க ஆசையில், முகம் தெரியாத ஒருவர் பைக்கில் வந்து அண்ணாமலையை இடித்துவிட்டு சென்று விடுகிறார். அண்ணாமலை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கால், கை மற்றும் தலையில் அடிபட்டுள்ளது என மருத்துவர் கூறுகிறார்.

மீனாவால் தான் இது நடந்துள்ளது, இந்த வீடு விளங்காமல் போவதற்கு மீனாதான் காரணம் என விஜயா சொல்ல, மருத்துவமனையில் இருந்து மீனா வெளியேறுகிறார்.

அண்ணாமலையின் இந்த நிலைக்கு தான் காரணம் என விஜயா கூறுவதால் மனமுடைந்து போகும் மீனா குடும்பத்தில் உள்ள யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து செல்கிறார். இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan