சொத்து பிரச்சனை! காணாமல் போகும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கப்போவது இதுதான்
சிறகடிக்க ஆசை
கடந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில், மனோஜ் வாங்கிய ரூ. 30 லட்சம் கடனை கேட்டு புதிதாக ஒருவர் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார். தன்னுடைய பணம் திரும்ப வரவில்லை என்றால் வீட்டில் உள்ள ஒருவரை தூக்கி விடுவேன் என மிரட்டியதும் முத்து கடும் கோபத்தில் கத்தினார்.

இதன்பின் மனோஜின் தந்தை அல்லது தாய் இருவரில் ஒருவர் கையெழுத்து போட்டு கொடுத்தால், நான் இப்போது இங்கிருந்து கிளம்பிவிடுவேன் என மிரட்டும் தோரணையில் பேசினார்.
அண்ணாமலை
இந்த நிலையில், வரும் வாரத்திற்கான புரோமோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே கூறியது போல் சொத்தை பிரித்து கேட்கிறார் மனோஜ். அதன்படி, மனவருத்தத்துடன் சொத்து பிள்ளைகளுக்கு பிரித்து கொடுக்க அண்ணாமலை முடிவு செய்துவிட்டார். அப்போது மனோஜ் மற்றும் முத்துவிற்கு இடையே சண்டை வருகிறது.

இதெல்லாம் பார்த்து கலங்கிப்போகும் அண்ணாமலை திடீரென வீட்டிலிருந்து காணாமல் போகிறார். அப்பா காணாமல் போனதற்கு மனோஜ்தான் காரணம் என கோபம் கொள்கிறார் முத்து. எப்படியாவது எனது கணவரை கண்டுபிடியுங்கள் என கதறி அழுகிறார் விஜயா. இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.