சிந்தாமணியின் சூழ்ச்சி.. சொந்த வீட்டை விட்டு வெளியேறும் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ
சிந்தாமணியின் சூழ்ச்சி
பைனான்சியருடன் கைகோர்த்துக்கொண்டு சிந்தாமணி பல சூழ்ச்சிகளை முத்து, மீனாவுக்கு எதிராக செய்து வருகிறார். ரூ. 48 லட்சம் கடனில் முத்து, மீனா ரூ. 10 லட்சத்தை அடைத்துவிட்டனர்.

மீதமுள்ள கடனை கட்ட இருவரும் இரவும் பகலும் உழைத்துக்கொண்டிருந்த நிலையில், சிந்தாமணி மீண்டும் ஒரு சூழ்ச்சி செய்துள்ளார். ரூ. 38 லட்சம் உடனடியாக வேண்டும் என கோரி நோட்டீஸ் அனுப்புமாறு பைனான்சியரிடம் சிந்தாமணி கூற, அதன்படி அந்த பைனான்சியரும் செய்கிறார்.
வெளியேறும் குடும்பம்
இதனால் குடும்பம் அதிர்ச்சியில் உடைந்துபோக, 'நம்மால் எதுவும் பண்ண முடியாமல் வேடிக்கைதான் பார்க்க முடியுமில்ல, நான் செத்து போயிரலாம்' என வருத்தத்தில் கண்கலங்கி பேசுகிறார் அண்ணாமலை.

இந்த நிலையில், அவமானத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று, தங்களுடைய சொந்த வீட்டிலிருந்து அண்ணாமலை குடும்பம் வெளியேறுகிறார்கள். இவர்கள் எங்கே தஞ்சமடைய போகிறார்கள்? இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை வரும் வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.