அண்ணாமலை சீரியல் புகழ் ஐஸ்வர்யாவா இது?- குழந்தைகளை பெற்ற பின் எப்படி உள்ளார் பாருங்க
அண்ணாமலை சீரியல்
சன் தொலைக்காட்சியில் ரசிகர்கள் விரும்பிய எத்தனையோ சீரியல்கள் உள்ளது. அதில் ஒன்று தான் அண்ணாமலை, ராடான் தயாரிப்பில் ராதிகா நடித்த இந்த தொடர் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.
இந்த தொடரில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தவர் நடிகை ஐஸ்வர்யா. சின்னத்திரை தொடர்ந்து நிறைய சீரியல்கள் நடித்துவந்த இவர் வெள்ளித்திரை பக்கமும் சென்றார்.
அங்கும் ஜோதிகா, சினேகா போன்ற நடிகைகளுக்கு தங்கையாக, தோழியாக சில படங்கள் நடித்தார்.
லேட்டஸ்ட் க்ளிக்
திருமணம் செய்துகொண்டு கனடாவில் செட்டில் ஆன இவர் அங்கு சூப்பர் சிங்கர் போன்ற பாடல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா தனது கணவர், குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாக அட நாம் சீரியல்களில் பார்த்து வந்த நடிகையாக இவர் என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
மாமன்னன் படத்தில் வடிவேலு கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வெளிவந்த உண்மை