அண்ணாத்த உலகம் முழுவதும் எந்த ஏரியாவில் எத்தனை கோடி வசூல் , முழுவிவரம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த வாரம் தீபாவளிக்கு வெளியான படம் அண்ணாத்த.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் இதுவரை எந்தெந்த ஏரியாவில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்று விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, இதுவரை தமிழகத்தில் ரூ. 84 கோடி வசூல் செய்துள்ளதாம். மேலும் ஓவர் சீஸ் இடங்களில் ரூ. 45 கோடி வசூல் செய்துள்ளது.
இதுமட்மின்றி கேரளாவில் ரூ. 2 கோடி, கர்நாடகா ரூ. 10 கோடி, தெலுங்கானா மற்றும் ஆந்திரா ரூ. 7.5 கோடி, வட இந்தியா ரூ. 2 கோடி என இதுவரை அண்ணாத்த படம் வசூல் செய்துள்ளதாம்.