அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து முக்கிய நடிகரின் பதிவு, என்ன கூறியுள்ளார் பாருங்க
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த, இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் படக்குழுவினர் ஒரு சிலருக்கு கொரோனா தோற்று உறுதியானதால், பாதியிலே அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது, இதில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் அவருடன் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து பிரபல நடிகர் ஜார்ஜ் மரியன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் "அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐயாவின் நகைச்சுவை உங்கள் அனைவரையும் அவரது பொன்னான நாட்கள் படங்களுக்குச் செல்லச் செய்யும்" என கூறியுள்ளார்.