உண்மையில் அண்ணாத்த மற்றும் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுகிறதா! வெளியான புதிய தகவல்..
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படமும், விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் தயாராகியுள்ளது.
மேலும் 50% மற்றும் தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக வசூல் பாதிக்கப்படும் என்பதால் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும், விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரலில் வெளியாகும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து அண்ணாத்த தயாரிப்பு தரப்பில் விசாரித்தபோது " இப்படி ஒரு தகவல் எப்படி உருவாச்சினே தெரியவில்லை, தயாரிப்பு நிறுவனம் 'அண்ணாத்த 'படத்தை தீபாவளி ரிலீஸ்னு அறிவித்ததால்.
படத்தைத் தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரும் வேலைகளில் இயக்குனரும் மொத்த படகுழுவும் தீவிரமா உழைச்சிட்டு இருக்கு.
படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என்று பரவும் தகவல் உண்மையல்ல, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் டீசர் வேலைகளில் கவனம் செலுத்திக்கொண்டு இருக்கோம்" என கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.