அண்ணாத்த, வலிமை, பீஸ்ட் எப்போது ரிலீஸ் தெரியுமா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கும் படங்கள் அண்ணாத்த, வலிமை, மற்றும் பீஸ்ட்.
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு மோஷன் போஸ்டர் மூலம் அறிவித்துவிட்டனர்.
எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் டீசர் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வலிமை திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் வரும் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துவிட்டார்.
அதே போல், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்றுகொண்டிருக்கும் நிலையில், அணைத்து பணிகளும் முடிந்து, பீஸ்ட் படம் வருகிற 2022 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.