அண்ணாத்த படத்தின் மூலம் சன் பிச்சர்ஸுக்கு இத்தனை கோடி லாபமா.. இமாலய ஷேர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் அண்ணாத்த.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், வசூலில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்தது வருகிறது.
அண்ணாத்த படத்தை தயாரித்திருந்த சன் பிச்சர்ஸ் நிறுவனமே, அப்படத்தை தமிழகத்தில் ஓன் ரிலீஸ் செய்தது.
மேலும், அண்ணாத்த திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 90 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் இதிலிருந்து 75% சதவீத ஷேர், சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளதாக, பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதன்படி பார்த்தால், ரூ. 66 கோடி தயாரிப்பு நிறுவனத்திற்கு ஷேர் கிடைத்துள்ளதாக தெரிகிறது.