முந்தைய படங்களை விட குறைந்த விலைக்கு விற்கப்பட்ட அண்ணாத்த, அதிர்ச்சியளிக்கும் தகவல்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த, அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இதனிடையே சமீபத்தில் இப்படத்தில் இருந்து 'அண்ணாத்த அண்ணாத்த', 'சாரா காற்றே' என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் அக்டோபர் 14 ஆம் தேதி அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த அண்ணாத்த படத்தில் டீசர் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் தெலுங்கு திரையரங்கு ரைட்ஸ் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அண்ணாத்த படத்தின் தெலுங்கு திரையரங்கு ரைட்ஸ் ரூ.14 கோடி விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் முந்திய திரைப்படமான தர்பார் இதை விட அதிக விலைக்கு விற்கப்பட்டது.
ஓட்டு கேக்க எங்க வருவீங்க? 41 குடும்பங்களையும் மாமல்லபுரத்தில் தனித்தனியாக சந்திக்கும் விஜய்! IBC Tamilnadu
தீவிரமடையும் போர்... உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை கரீபியனுக்கு அனுப்பிய ட்ரம்ப் News Lankasri