ரஜினியின் அண்ணாத்த படத்தின் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா.. ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி

siva rajinikanth annaththe movie ticket
By Kathick Oct 23, 2021 10:20 AM GMT
Report

சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த.

இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

அமெரிக்காவில் மட்டும் இப்படத்தை சுமார் 300 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி மாலையே இப்படத்தின் பிரிமீயர் காட்சிகள் திரையிடப்பட உள்ளன.

அதற்காக டிக்கெட் கட்டணமாக பெரியவர்களுக்கு 20 டாலர், சிறியவர்களுக்கு 15 டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.

இது வழக்கமான கட்டணங்களை விட கூடுதல் தொகை என்று தகவல் தெரிவிக்கின்றனர். 20 டாலர் கட்டணம் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 1400.

இருந்தாலும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் அவ்வளவு தொகை கொடுத்து படத்தைப் பார்க்க தயாராக இருக்கிறார்களாம்.

தமிழகத்திலேயே அதிகாலை காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டால் ரூ. 1000, ரூ. 2000 வரை கட்டணம் போகும் என்கிறார்கள்.

இதற்குமுன்  பேட்ட, தர்பார் ஆகிய படங்களின் சிறப்பு காட்சிகான கட்டணம் ரூ. 1000 வரை விற்கப்பட்டது


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US