அண்ணாத்த ரிலீஸுக்கு பின் ரஜினி இயக்குனர் சிவாவிடம் சொன்ன விஷயம்!

Rajinikanth Annaththe Siva
By Jeeva Nov 09, 2021 09:00 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அண்ணாத்த.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான அண்ணாத்த திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. என்னதான் வசூல் சாதனைகளை செய்தாலும் அண்ணாத்த திரைப்படம் அதிகமாக எதிர்மறையான விமர்சங்களையே பெற்று வருகிறது.

இந்நிலையில் அண்ணாத்த’ வெளியாகி ஓடிக்கொண்டிருப்பது குறித்து ரஜினி என்ன சொன்னார் என்பதை இயக்குநர் சிறுத்தை சிவா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில், “படம் வெளியானபிறகு ரஜினி என்ன சொன்னார்?” என்று கேட்டதற்கு ”அண்ணாத்த ப்ளாக் ஃபஸ்டர் ஹிட் என்பதால் அடிக்கடி ரஜினி சாரிடம் பேசுகிறேன்.

ஒவ்வொரு முறையும் ரஜினி சாரிடம் போனில் பேசும்போது சந்தோஷத்துடன் ”சிவா சார்… படம் பெரிய சக்சஸ்ங்கிறாங்க சிவா சார்…. நாம ஜெயிச்சிட்டோம் சிவா சார்” என்பார். அவர், அப்படி பேசுவதை கேட்பதற்கே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார் சிவா.

  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US