அண்ணாத்த திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடிவசூலா !
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அண்ணாத்த.
பெரிய எதிர்பார்ப்பிற்கு பின் உலகம் முழுவதும் வெளியான இப்படம் அனைவரிடமும் எதிர்மறையான விமரசங்களையே பெற்றது.
ஆனால் அண்ணாத்த திரைப்படத்தை குடும்ப ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர் என்றே கூறலாம். அதன்படி வெளிநாட்டு வசூலில் அண்ணாத்த திரைப்படம் சொதப்பினாலும், தமிழகத்தில் நல்ல வசூலையே பெற்றுள்ளது.
இதனிடையே தற்போது அண்ணாத்த திரைப்படத்தின் தமிழக வசூல் விவரம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
அதன்படி அண்ணாத்த திரைப்படம் தமிழகத்தில் ரூ 150 கோடியை வசூலை நெருங்கிவிட்டதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் இது குறித்த புகைப்படங்களையும் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan