நடிகர் தனுஷ் இயக்கத்தில் இணையும் முன்னணி நடிகர்கள்.. வெளியான புது அப்டேட்
தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ்.
தற்போது படத்தில் நடிப்பதை தாண்டி இயக்கத்திலும் தீவிரமாக இறங்கி உள்ளார். இதுவரை தனுஷ் இயக்கத்தில் பா. பாண்டி, ராயன் போன்ற ஹிட் படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதை தொடர்ந்து, தனுஷ் அவர் இயக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், அடுத்து இவர் ஒரு புது படத்தை இயக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது.
லேட்டஸ்ட் தகவல்
அப்படம் குறித்து வந்த தகவல் என்னவென்றால் அறிமுக தயாரிப்பாளர் ஆகாஷ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார் எனவும், இந்த படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அசோக் செல்வனிடம் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், கிட்டத்தட்ட ரூ. 120 கோடி பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
