மலையாள நடிகர் பகத் பாசிலை தொடர்ந்து கமலின் விக்ரம் படத்தில் இணைந்த முக்கிய நடிகர், வெளியான சூப்பர் அப்டேட்..!
உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகி இணையத்தில் பெரிய அளவில் ட்ரெண்டானது, முழுக்க அக்ஷன் படமாக உருவாகவுள்ள விக்ரம் இப்பொழுதே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் வில்லனாக நடிப்பார் என தகவல் வெளியாகி இருந்தது.
அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தில் நடிகர் பிரபு தேவாவும் இணையவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.காதலா காதலா திரைப்படத்திற்கு மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri