எஸ்.பி.ஜனநாதன் மரணத்தை தொடர்ந்து அவரின் வீட்டில் ஏற்பட்ட மற்றுமொரு இழப்பு ! வெளியான அதிர்ச்சி தகவல்.
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தமிழ் சினிமாவின் புரட்சி இயக்குனர் என அழைக்கப்படுபவர், இயற்கை என்ற திரைப்படத்தின் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுடைமை என்ற திரைப்படங்கள் பெரிய வரவேற்பை பெற்றது.
இதனிடையே விஜய் சேதுபதியை வைத்து இவர் இயக்கி வந்த லாபம் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு அவர் மதிய உணவிற்காக வீட்டிற்கு சென்றுள்ளார் ஜனநாதன்.
பின் அவரது உதவியாளர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது தனது அறையில் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார் ஜனநாதன். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சுயநினைவு திரும்பவில்லை.
மேலும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜனநாதன் மரணமடைந்து இரண்டு நாட்களே ஆன நிலையில், சோகம் தாங்காமல் மாரடைப்பு காரணமாக அவரது தங்கை லக்ஷ்மி இன்று உயிரிழந்தார். அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் அவரது குடும்பத்தினர் மத்தியில் மட்டுமின்றி திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.