அந்தகன் டீசரை தொடர்ந்து 24-ம் தேதி ரசிகர்களுக்கு வரும் ட்ரீட்
அந்தகன்
டாப் ஸ்டார் படம் எப்போது திரைக்கு வரும் அவரை திரையில் பார்க்கலாம் என அவருடைய ரசிகர்கள் காத்திருந்தனர்.
தியாகராஜன் இயக்கத்தில் பிரஷாந்த் நடிப்பில் பாலிவுட்டில் சக்க போடு போட்டு மெகா ஹிட் வசூல் செய்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் அந்தகன் படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
பர்ஸ்ட் சிங்கிள்
இப்படத்தில் சமுத்திரக்கனி, நவரச நாயகன் கார்த்திக், சிம்ரன் என பல நட்சத்திரங்கள் நடிக்க, பிரஷாந்திற்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார்.
அதோடு சென்ஷேஷ்னல் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் 24ம் தேதி புதன் கிழமை வரவுள்ளது. கண்டிப்பாக இப்பாடல் வைரல் ஹிட் அடிக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
