அடுத்த கட்டத்திற்கு சென்ற பிரசாந்தின் அந்தகன் திரைப்படம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர்.
‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அடுத்தகட்டமாக பின்னணி வேலைகளை முழுவீச்சில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக உறுதி: மோசடி குற்றச்சாட்டுகளை நிராகரித்த தேர்தல் ஆணையம் News Lankasri
எண் கணிதம் கூறும் ரகசியம்: 35 வயதிற்குப் பிறகு இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ராஜவாழ்க்கை! Manithan