நடிகைகளிடம் எல்லைமீறும் பாலைய்யா.. நயன்தாரா விஷயத்தில் அப்படி நடந்துகொண்டார்
பாலகிருஷ்ணா
தெலுங்கு சினிமாவில் மூத்த முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவரை ரசிகர்கள் பாலையா என அழைத்து வருகிறார்கள்.
சமீபத்தில் இவர் மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்டது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இதுகுறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதே போல் பாலையா மீது பலரும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து பேசி வருகிறார்கள்.
நடிகைகளிடம் எல்லைமீறி பாலகிருஷ்ணா நடந்து கொள்கிறார் என கூறப்படும் இந்த நிலையில், நடிகை நயன்தாரா அவருடன் இணைந்து 4 திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.
நயன்தாரா - பாலைய்யா
ஆனால், அவருக்கு இது போல் எந்த ஒரு இடத்திலும் சங்கடம் ஏற்பட்டது இல்லை என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் நமது சினிஉலகம் பேட்டியில் பேசியுள்ளார்.
இதில் "பாலகிருஷ்ணாவுடன் நடிகை நயன்தாரா இதுவரை 4 திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். ஆனால், அவருக்கு இதுபோன்ற விஷயங்கள் நடந்ததே இல்லை. பாலையாவை பொறுத்தவரை தன்னை மதித்து நடந்துகொள்ள வேண்டும். படப்பிடிப்பு சென்றவுடன் அவர் காலில் விழுந்து வணங்கிவிட்டால் அத்துடன் அனைத்தும் முடிந்துவிட்டது. அதன்பின் அவரால் எந்த ஒரு டார்ச்சரும் இருக்காது. நீங்கள் நிம்தியாக அவருடன் நடித்துவிட்டு வந்துவிடலாம்" என பேசியுள்ளார்.
"பாலய்யா கால தொட்டு கும்பிட்டா எந்த Torture-ம் இருக்காது" - @Anthanan_Offl
— Cineulagam (@cineulagam) June 4, 2024
▶️ https://t.co/rMiKZ6kUK0#Balakrishna #Balayya #Anjali #Valaipechu #Cineulagam pic.twitter.com/QMadBfLCtn

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
