ஆன்டி இண்டியன் திரைவிமர்சனம்

anti indian movie review blue sattai maaran
By Kathick Dec 11, 2021 11:50 AM GMT
Report

Youtube-ல் படங்களுக்கு விமர்சனம் செய்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் தற்போது நடித்து, இயக்கியுள்ள திரைப்படம் தான் ஆன்டி இண்டியன். அரசியல் கதைக்களம் கொண்ட இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி ரசிகர்கள் முழு எதிர்பார்ப்பைபும் இப்படம் பூர்த்தி செய்ததா..? இல்லையா..? வாங்க பார்க்கலாம்

கதைக்களம்

இந்து தாய்க்கும், முஸ்லிம் தந்தைக்கும் பிறந்தவர் பாட்ஷா {மாறன்}. பாட்ஷாவை ஆள் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கொலை செய்கிறார்கள். பாட்ஷா உடலை பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்ய எடுத்து செல்கிறார்கள். ஆனால், பாட்ஷா உண்மையான முஸ்லிமாக வாழவில்லை என்று கூறி முஸ்லிம் மதத்தினர் அவரது உடலை அடக்கம் செய்ய மறுத்து உடலை திருப்பி அனுப்புகிறார்கள்.

இதன்பின் வீட்டுக்கு திருப்பி எடுத்து செல்லப்பட்ட பாட்ஷாவின் உடலுக்கு இந்து முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு மயான பூமிக்கு எடுத்து செல்கிறார்கள். அங்கு இறந்தவரின் பெயர் பாட்ஷா என்பதால் அங்கும் அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மற்றொருபுறம் பாட்ஷா உடலை வைத்து அரசியல் செய்கிறார்கள். இறுதியில் பாட்ஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதா? இல்லையா? என்பது தான் மீதி கதை. 

படத்தை பற்றிய அலசல்

பாட்ஷா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் புளு சட்டை மாறன். ஆரம்பம் முதல் இறுதிவரை பிணமாக இருப்பதால் இவரது நடிப்பை பார்க்க முடியவில்லை. ஆனால், கதை இவரை சுற்றியே நடக்கிறது. சடலம், அடக்கம் செய்ய மறுக்கும் மதத்தினர், அதை சுற்றி நடக்கும் அரசியல் என படத்தை இயக்கி இருக்கிறார்.

முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதி மெதுவாகவும் திரைக்கதை நகர்கிறது. ஒரு சில இடங்களில் வசங்கள் ஓகேவாக இருந்தாலும், பல இடங்களில் வசங்கள் சொதப்பியுள்ளது. தேவையில்லாத காட்சிகள் வேண்டுமென்றே திணித்தது போல் இருக்கிறது. அதுபோல் நீண்ட காட்சிகளும் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.

மதங்களுக்கிடையே உண்டாகும் சில பிரச்சனைகளையும், சலசலப்பையும் காட்டியதற்கும், மதத்தால் சில அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும் செய்யும் சூழ்ச்சியை வெளிப்படுத்தியதற்கும் பாராட்டுகள். ப்ளூ சட்டை மாறனே இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். ஆனால், அதிகம் கவனம் பெறவில்லை. கதிரவனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. 

க்ளாப்ஸ்

கதைக்களம்

பல்ப்ஸ்

தேவையில்லாத காட்சிகள்

திரைக்கதையில் விறுவிறுப்பில்லை

பல இடங்களில் வசங்கள் சொதப்பியுள்ளது

மொத்தத்தில் படம் சுமார் தான்..

2.25 / 5

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US