நயன்தாராவின் ஹிட் பட தெலுங்கு ரீமேக்கில் நடிகை அனுஷ்கா ! என்ன படம் தெரியுமா?
நடிகை நயன்தாரா தொடர்ந்து கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களிலே நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’.
விக்னேஷ் சிவன் தயாரித்திருந்த இப்படம் கடந்த வாரம் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது. இதில் நடிகை நயன்தாரா கண்பார்வையற்ற பெண்ணாக நடித்திருந்தார்.
இந்நிலையில் நெற்றிக்கண் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, முன்னணி தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நெற்றிக்கண் ரீமேக்கில் நடிகை அனுஷ்காவை நடிக்க வைக்க முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது, அவர் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan