அனுபமா பரமேஸ்வரனின் லிப் கிஸ் காட்சி! ட்ரைலர் பார்த்து ரசிகர்கள் கடும் ஷாக்
பிரேமம் படம் மூலமாக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் அனுபமா பரமேஸ்வரன். அதற்கு பிறகு அவர் ஹோம்லியாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் ரசிகர்களை கவர்ந்தார்.
அவர் ஹோம்லியாக மட்டுமே இது வரை நடித்து வந்த நிலையில் தற்போது திடீரென ஒரு தெலுங்கு படத்தில் அவர் லிப் கிஸ் காட்சியில் நடித்து இருப்பது அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.
ரௌடி பாய்ஸ் என்ற தெலுங்கு படத்தில் அவர் தமிழ் பெண்ணாக நடித்து இருக்கிறார். ஆந்திராவில் ஒரு மெடிக்கல் காலேஜில் படிக்கும் தமிழ் பெண்ணாக நடிக்கிறார். அவருக்காக மோதிக்கொள்ளும் மெடிக்கல் காலேஜ் மற்றும் எஞ்சினியரிங் காலேஜ் மாணவர்கள் சண்டை பற்றியது தான் கதை.
நேற்று வந்த ட்ரெய்லரில் அனுபமா முத்த காட்சியில் நடித்து இருப்பது பற்றி தான் இணையத்தில் பரபரப்பாக பேச்சு இருக்கிறது.