அனுபமா காரில் காற்றை இறக்கிவிட்டு ரகளை செய்த ரசிகர்கள்! கடை திறப்பு விழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது தெலுங்கு படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் ரௌடி பாய்ஸ் என்ற படத்தில் முத்த காட்சியில் நடித்ததும் வைரல் ஆனது.
கடை திறப்பு விழா
இந்நிலையில் சமீபத்தில் அனுபமா தெலுங்கானாவில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவரை பார்க்க பெரிய அளவில் ரசிகர் கூட்டணி கூடி இருக்கிறது.
அவரும் வழக்கம்போல ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு கடை திறக்க சென்றுவிட்டார். அவர் வெளியே வரும்போது தான் அதிர்ச்சி காத்திருந்தது.

ரசிகர்கள் ரகளை
அனுபமா வெளியே வந்து காரில் ஏற முற்படும்போது ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். அவருடன் செல்பி எடுக்க பலரும் முயற்சி செய்துள்ளனர்.
மேலும் செல்பி எடுக்க முடியாத சிலர் அனுபமாவின் காரில் காற்றை பிடிங்கி விட்டிருக்கிறார்கள். அதன் பின் போலீசார் தான் ரசிகர்களை விரட்டி அனுபமாவை காப்பாற்றி வேறு காரில் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.