என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி தோன்றுகிறது? நடிகை அனுபமா பரமேஸ்வரன் பேச்சு
அனுபமா பரமேஸ்வரன்
இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தனுஷின் கொடி படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி தந்தார்.

இதன்பின் சைரன், தள்ளிபோகாதே, டிராகன், பைசன், லாக் டவுன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக இவர் நடிப்பில் 'கிரேசி கல்யாணம்' எனும் திரைப்படம் வெளிவரவுள்ளது.
நடிகை ஓபன் டாக்
இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் கூறியதாவது, "நான் மிகவும் சிறப்பாக இருக்கிறேன், என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி தோன்றுகிறது? ஆம் அது உண்மைதான். நான் ஒரு கடினமான ஆண்டை கடந்து வந்தேன். அதிலிருந்து மீண்டு வந்ததால்தான், இன்று என்னால் இவ்வளவு வெளிப்படையாகவும், மகிழ்ச்சியாகவும் பேச முடிகிறது.

நான் இப்போது என் வாழ்வில் மிகவும் அமைதியான மற்றும் நல்லதொரு மனநிலையில் இருக்கிறேன். 'கிரேசி கல்யாணம்' படப்பிடிப்பின் போது நான் இதே மனநிலையில் இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக கிரேசியாக வந்திருக்கும். ஆனால், இப்போது நான் அந்த நிலையில் இல்லை. இப்போது நான் மிகவும் நன்றாக உள்ளேன்" என்றார்.
மேலும் பேசிய அவர், "இது எனது சொந்த சமூக வலைதள கணக்கு, அதில் என்ன பதிவிட வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்க வேண்டும். நான் எதையும் வேண்டுமென்றே வெளிப்படுத்தவில்லை. மாறாக ஒரு பெண்ணாக எனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களையும், ட்ரான்சிஷன் (transition) மட்டும் பகிர்துகொண்டேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். என் வாழ்க்கையை பற்றியோ என்னைப்பற்றியோ வெளியில் உள்ளவர்களுக்கு என்ன தெரியும்?" என கூறினார்.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுபமா பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இவருக்கு பிரேக்கப் ஆகிவிட்டது என நெட்டிசன்கள் இடையே கிசுகிசுக்கப்பட்டது. அதுகுறித்து தான் மனம் திறந்து பேசியுள்ளார் என தற்போது கூறப்படுகிறது.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri