லோகேஷ் படத்துல சாகனும்! பிரபலத்தின் ஆசையை நிறைவேற்றிய லோக்கி
லியோ
லியோ திரைப்படம் நேற்று உலகளவில் வெளிவந்து பட்டையை கிளப்பி வருகிறது. விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
அத்தகைய எதிர்பார்ப்புடன் வெளிவந்த லியோ திரைப்படம் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சில விமர்சனங்கள் எழுந்தாலும் கூட மக்கள் மத்தியில் லியோ படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
லியோ படம் குறித்து வெளிவந்த விமர்சனங்களில் ஒன்று ஏன், எதற்காக அனுராக் கைஷப் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். 10 வினாடிகள் கூட அவரை திரையில் காட்டவில்லை. அதற்குள் அவர் இறந்துவிட்டார் என ரசிகர்கள் கடுப்பானார்கள்.
ஆசையை நிறைவேற்றிய லோக்கி
சில மாதங்களுக்கு முன் இயக்குனரும், நடிகருமான அனுராக் கைஷப் அளித்த பேட்டி ஒன்றில் 'எனக்கு லோகேஷ் கனகராஜ் படத்தில் சாகவேண்டும். கதாபாத்திரம் எதுவும் தேவையில்லை. ஒரே ஒரு காட்சியில் இறந்துவிட்டால் அதுவே போதும்' என கூறியிருந்தார்.
இதனால் தான் ஒரே ஒரு காட்சியில் அனுராக் கைஷப்பை காட்டி உடனடியாக அவருடைய கதாபாத்திரத்தை கொன்றுவிட்டாரோ லோகேஷ் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
