ஹீரோவுக்கு சமையல் செய்பவருக்கு ஒரு நாள் சம்பளம்.. கேட்டு ஷாக் ஆன நடிகர்
பொதுவாக நடிகர்கள் என்றால் கோடிகளில் சம்பளம் வாங்குவார்கள். அதனால் அவர்கள் சொகுசான வீடு, கார் என அவர்கள் வாழ்க்கை இருக்கும்.
படப்பிடிப்புக்கு வரும்போது அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஏராளமான செலவுகளை வைப்பார்கள். கேரவன், உணவு, மேக்கப் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு எக்கச்சக்க செலவு வைப்பார்கள்.
சமையல் செய்பவருக்கு 2 லட்சமா
தற்போது இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் பேட்டியில் கோபமாக பேசி இருக்கிறார். நயன்தாராவின் இமைக்கா நொடிகள், விஜய்யின் லியோ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
ஒரு முன்னணி ஹீரோ படப்பிடிப்புக்கு வந்தால் அவருக்கு ஒரு குறிப்பிட்ட செஃப் சமையல் செய்ய வர வேண்டுமாம், அவருக்கு ஒரு நாளுக்கு 2 லட்சம் ருபாய் சம்பளம்.
படத்தின் பட்ஜெட்டை தான் இப்படி கூட்டுகிறார்கள். அந்த நபர் சமைப்பது குருவிகளுக்கு கொடுக்கும் உணவு (birdfeed) போல கொஞ்சமாக தான் இருக்கும். கேட்டால் நான் அதை மட்டும் தான் சாப்பிடுவேன், மருத்துவர் சொல்லி இருக்கிறார் என்றெல்லாம் சொல்வார்கள். என் செட்டில் இப்படி எல்லாம் நடக்க விட மாட்டேன்.
ஆனால் அவர் எந்த ஹீரோவை சொல்கிறார் என்பதை வெளிப்படையாக குறிப்பிடவில்லை.

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
