தெலுங்கு சினிமாவுடன் போட்டி.. தமிழும் இப்படி ஆகிவிட்டது: தாக்கி பேசிய அனுராக் கஷ்யப்
மகாராஜா படத்தில் வில்லனாக நடித்து இருந்தவர் நடிகர் அனுராக் கஷ்யப். அவர் பல விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசி அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்துபவர்.
ஹிந்தி சினிமாவை பற்றி தொடர்ந்து விமர்சித்து வந்த அவர் தற்போது மும்பையைவிட்டு வெளியேறிவிட்டதாக முன்பே கூறி இருந்தார். மேலும் தென்னிந்திய படங்களில் அடுத்து கவனம் செலுத்தப்போவதாகவும் கூறி இருந்தார்.
தமிழ் சினிமா மீது தாக்கு
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழ் சினிமாவை தாக்கி பேசி இருக்கிறார்.
"தெலுங்கு pan இந்தியா படங்கள் உடன் போட்டி போட தமிழ் சினிமா தொடங்கி இருக்கிறது. திடீரென எல்லா தமிழ் பாடல்களும் ஆங்கிலத்தில் இருக்கிறது. திடீரென வெளிநாட்டு ராக் பேண்ட் பாடல்கள் போல இவை இருக்கின்றன."
"I’m coming for you மற்றும் I’m gunning for you போன்ற வரிகளும் அதில் வருகிறது. இது தமிழ் பாடல் இல்லை. இதற்கு முன்பெல்லாம் தமிழ் பாடல்களை ஹிந்தியில் எடுத்து பயன்படுத்தும் அளவுக்கு இருந்தது, இப்போது இல்லை" என அனுராக் கஷ்யப் தெரிவித்து இருக்கிறார்.