15 நிமிடம் சந்திக்க ஒரு லட்சம் பணம்.. ஷாக் கொடுத்த நயன்தாரா பட நடிகர் அனுராக் காஷ்யப்

Parthiban.A
in பிரபலங்கள்Report this article
பிரபல இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப் தமிழில் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து பெரிய அளவில் பேசப்பட்டவர்.
அவர் சமீபத்தில் விஜய்யின் லியோ படத்திலும் நடித்து இருப்பார். லோகேஷ் கனகராஜ் படத்தில் இறங்கும்படியாவது ஒரு ரோல் வேண்டும் என அவரே கேட்டு கெஸ்ட் ரோலில் நடித்தார்.
இனி என்னை சந்திக்க பணம் கொடுக்க வேண்டும்..
இந்நிலையில் அனுராக் காஷ்யப் இனி தன்னை யாராவது சந்திக்க வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் தர வேண்டும் என அறிவித்து இருக்கிறார்.
"புதுமுகங்களுக்கு உதவி செய்ய நினைத்து நான் அதிக நேரத்தை வீணடித்து இருக்கிறேன். அதுவும் சராசரியான ஒன்றாக தான் இறுதியில் இருக்கிறது. தங்களை creative genius என நினைத்துக்கொண்டு இருப்பவர்களிடம் என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
இனி 10-15 நிமிடம் சந்திக்க வேண்டும் என்றால் 1 லட்சம், 30 நிமிடத்திற்கு 2 லட்சம், ஒரு மணி நேரத்திற்கு 5 லட்சம் ருபாய் என்பது தான் ரேட்.
உங்களால் பணத்தை அட்வான்ஸாக கொடுக்க முடியும் என்றால் என்னை அழையுங்கள், அல்லது விலகி இருங்கள்.