வருங்கால கணவர் இப்படி தான் இருக்க வேண்டும்.. 40 வயதில் நடிகை அனுஷ்கா போட்ட கண்டிஷன்
சிங்கம், தெய்வத்திருமகள், என்னை அறிந்தால், பாகுபலி 1,2 என முன்னணி நடிகர்களுடன் இனைந்து நடித்து, தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து வந்தவர் நடிகை அனுஷ்கா.
ஆனால், இஞ்சி இடுப்பழகி படத்திற்கு இவர் உடல் எடையை அதிகரித்து, அதன்பின் குறைக்கு முடியாமல் போனதினால், பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.
40 வயதாகும் அனுஷ்காவின் திருமணம் குறித்து அவ்வப்போது தகவல் கசிந்து, பின்னர் அவர் அதனை மறுப்பதும் வழக்கமாகி விட்டது.
இந்நிலையில் நடிகை அனுஷ்காவின் பெற்றோர், தீவீரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்களாம். அப்படி தீவிரமாக மாப்பிள்ளை தேடி வரும் பெற்றோரிடம், ஒரே ஒரு கண்டிஷன் தான் போடுகிறாராம் நடிகை அனுஷ்கா.
தன்னுடைய வருங்கால கணவர் மிகப்பெரிய பணக்காரராக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவர் 6 அடி உயரமாக தன்னுடைய உயரத்துக்கு ஏற்ற போல் இருக்க வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.