சந்திரமுகி 2 படத்தில் கதாநாயகியாக நடிப்பாரா நடிகை அனுஷ்கா.. இயக்குனர் பி. வாசு அதிரடி விளக்கம்
விரைவில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி படத்தின் 2ஆம் பாகம் உருவாகவுள்ளது.
இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். கதாநாயகியாக நடிகை அனுஷ்கா நடிக்கவிருக்கிறார் என்று தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் பி.வாசு அதிரடியாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது : " ஜோதிகா வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அனுஷ்கா மட்டுமின்றி இன்னும் சில முன்னணி நடிகைகளிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
சந்திரமுகியாக அனுஷ்கா தான் நடிக்கிறாரா? இல்லை வேறு நடிகை நடிக்க உள்ளாரா? என்பது குறித்து படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் முடிவெடுக்கப்படும் " என்று அவர் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri