மீண்டும் விஜய் படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை அனுஷ்கா.. சுவாரஸ்ய தகவல்
தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ரஜினி, என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.
கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் தான், அனுஷ்காவின் வெற்றி படம். இந்நிலையில் மீண்டும் தமிழில் புதிய படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளாராம் அனுஷ்கா. விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தாண்டவம் படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தவர் அனுஷ்கா.
நீண்ட இடைவெளிக்கு பின், மீண்டும் விஜய் இயக்கத்தில் கமெர்ஷியல் கதையில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக.