பிரம்மாண்ட படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை! அவருக்கு பதிலாக நடிக்க போவது இவர் தானாம்! சரித்திர கதை!
அனுஷ்கா நடிப்பில் வெளியான ருத்ரமாதேவி படத்தை இயக்கிய குணசேகரம் இப்படத்தை இயக்கவுள்ளாராம். சகுந்தலம் என அப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
முதலில் அனுஷ்காவை நடிக்க சொல்லி கேட்டார்களாம். ஆனால் அவர் கதை பிடிக்கவில்லை என கூறி மறுத்துவிட்டாராம். இதனால் நடிகை சம்ந்தாவை அணுக அவர் ஓகே சொல்லிவிட்டாராம்.
சரித்திர கதை கொண்ட இப்படத்தில் ஹீரோவாக மலையாள நடிகர் தேவ்மோகன் நடிக்கிறாராம்.
மார்ச் 20 ல் சமந்தா படப்பிடிப்பில் இணைகிறாராம். படத்திற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் போடும் பணிகள் நடைபெற்று வருகிறதாம்.
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார்.