அனுஷ்கா ஷெட்டி ரிட்டர்ஸ்: வாய்ப்பு கொடுக்கும் விஜய்?
அனுஷ்கா ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் சைஸ் ஜீரோ படத்திற்காக உடல் எடையை அதிகரித்த அவர் அதற்க்கு பிறகு எடையை குறைக்க முடியாமல் திணறி வருகிறார். பல்வேறு சிகிச்சைகள் பயிற்சிகள் என அவர் செய்தாலும் மீண்டும் அவர் எடை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
அதனால் அனுஷ்கா சினிமாவில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். கடைசியாக அவர் மாதவன் உடன் சைலன்ஸ் என்ற படத்தில் தான் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது அவர் ரீஎன்ட்ரி கொடுப்பதாக தகவல் பரவி வருகிறது.
இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் படத்தில் தான் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. அவரது ரோலை சுற்றி தான் மொத்த கதையும் இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஏற்கனவே அனுஷ்கா விஜய்யின் தெய்வ திருமகள் படத்தில் நடித்து இருக்கிறார். அதனால் இந்த கூட்டணி மீண்டும் சேர்வதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
இருப்பினும் இந்த படம் பற்றிய அதிகார்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வரவில்லை.
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan