சூர்யாவை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகருடன் இணைந்த நடிகை அபர்ணா பாலமுரளி.. அதுவும் யாருடன் தெரியுமா
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம், சூரரைப்போற்று.
இப்படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இவர் இதற்குமுன் தமிழில் வெளியான 8 தோட்டாக்கள் மற்றும் சர்வம் தாளமயம் படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், சூரரை போற்று திரைப்படம் மூலமாக தான், திரையுலகில் மிகவும் பிரபலமாகியுள்ளார் நடிகை அபர்ணா.
இந்நிலையில், சூர்யாவை தொடர்ந்து, கார்த்திக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை அடுத்து கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இப்படங்களின் படப்பிடிப்பை முடித்த பிறகு தான், சர்தார் படப்பிடிப்பில் இணைவார் என தெரிவிக்கின்றனர். மேலும் இதுகுறித்து விரைவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan