மருத்துவமனையில் ஏ. ஆர். ரஹ்மான்! தற்போதைய நிலை என்ன.. வெளிவந்த உண்மை

Kathick
in பிரபலங்கள்Report this article
மருத்துவமனையில் ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து அதிர்ச்சியான தகவல்கள் தொடர்ந்து வெளிவந்தது. ஆனால், தற்போது மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர். ரஹ்மான் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். அவர் உடலுக்கு எதுவும் இல்லை, நன்றாக இருக்கிறாராம்.
நேற்று வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு திரும்பிய ஏ.ஆர். ரஹ்மான் தூக்கம் வராமல் இரவு 2 மணி வரை தவித்துள்ளாராம். பின் லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வாய்வு பிரச்சனையாக இருக்கும் என ஜெலீசில் மாத்திரை போட்டுவிட்டு தூங்கிவிட்டாராம்.
ஆனாலும் அவருக்கு அந்தபிரச்சனை சரியாகவில்லை என, இன்று காலை அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ஏ.ஆர். ரஹ்மானை பரிசோதித்த மருத்துவர்கள், உங்களுடைய உடம்பிற்கு எந்த பிரச்சனையும் இல்லை நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என கூறியுள்ளனர். இந்த தகவலை பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.
வெளிவந்த உண்மை
மேலும் மருத்துவமனை தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஏ.ஆர். ரஹ்மானுக்கு நீரிழப்பு தொடர்பான அறிகுறிகள் இருந்தது என்றும், வழக்கமான பரிசோதனை முடிந்தபின் அவர் கிளம்பிவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதுவும் இல்லை, அவர் நலமுடன் இருக்கிறார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
