ரஜினியின் உடல்நிலை.. மருத்துவமனை வெளியிட்ட புது அறிக்கை
நடிகர் ரஜினிகாந்த் இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நேற்று இரவு திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார்.
அவருக்கு இன்று சிகிச்சை நடைபெற்றது. அவருக்கு என்ன பிரச்சனை. உடல்நிலை எப்படி இருக்கிறது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அறிக்கை
அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது..
"திரு ரஜினிகாந்த் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 30ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் இருந்து வெளியேறும் முக்கிய ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது."
"அறுவை சிகிச்சை இல்லாமல், transcatheter முறையில் அந்த ரத்த நாளத்தில் stent பொருத்தப்பட்டது."
"திட்டமிட்டபடி சிகிச்சை நடந்து முடிந்தது. திரு. ரஜினிகாந்த் உடல்நிலை சீராக, நலமாக இருக்கிறது. அவர் இன்னும் இரண்டு தினங்களில் வீட்டிற்கு அனுப்பப்படுவார்".
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri