ஏப்ரலில் மட்டும் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள் என்னென்ன தெரியுமா? லிஸ்ட் இதோ
பொதுவாக சினிமாவை ரசிக்க ரசிகர்கள் கூட்டம் உள்ளது. எப்போது புது படங்கள் வெளிவரும் என்று ஆவலோடு காத்துக்கொண்டிருப்பர். அந்த வகையில், இந்த ஏப்ரல் மாதம் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.
டெஸ்ட்:
சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகும் திரைப்படம் டெஸ்ட். இப்படம் வரும் 4 - ம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
குட் பேட் அக்லி:
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வரும் 10 - ம் தேதி வெளிவர உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித் ரசிகர்கள் பெரும் ஆவலோடு இப்படத்திற்காக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
கேங்கர்ஸ்:
சுந்தர். சி இயக்கத்தில் காமெடி நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் 24 - ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் திரைப்படம் கேங்கர்ஸ். காமெடி கலாட்டா நிறைந்த படமாக கேங்கர்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.