ஷங்கர், மணிரத்னத்தின் தோல்வி பயத்தை தருகிறதா?.. ஏ.ஆர்.முருகதாஸ் அதிரடி பதில்
ஏ.ஆர்.முருகதாஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது, இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
அதிரடி பதில்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் முருகதாஸிடம், மூத்த இயக்குநர்கள் குறித்து கேள்வி எழுப்ப அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, ஷங்கரின் இந்தியன் - 2, கேம் சேஞ்சர் மற்றும் மணிரத்னத்தின் தக் லைஃப் உள்ளிட்ட திரைப்படங்கள் தோல்வியடைந்துள்ளன.
இந்த டாப் இயக்குநர்களின் சறுக்கல் உங்களிடம் பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்துகிறதா? என்று கேள்வி வர அதற்கு, இயக்குநர்கள் மணிரத்னமும், ஷங்கரும் மிகச்சிறந்தவர்கள்.
இருவரின் திரைப்படங்களும் வெறும் கமர்சியலைத் தாண்டி சமூக ரீதியான சிந்தனையை விதைக்கும். அவ்வளவு எளிதாக அவர்களைப் புறக்கணிக்க முடியாது. இருவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.