மாஸ் ஹிட்டடித்த சிவகார்த்திகேயனின மதராஸி... கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
மதராஸி படம்
அமரன் பட வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் மதராஸி.
ஏ.ஆர்.முருகதாஸ்-சிவகார்த்திகேயன் முதன்முறையாக கூட்டணி அமைத்து உருவான இப்படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியானது. இதில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்.
ஸ்ரீலட்சுமி மூவிஸ் நிறவனம் தயாரிக்க அனிருத் இசையில் தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ரிலீஸ் ஆகி இருந்தது.
கொண்டாட்டம்
பாக்ஸ் ஆபிஸில் தெறிக்கும் வசூல் வேட்டை நடத்தியுள்ள இப்படத்திற்கு விமர்சனங்களும் அமோகமாக தான் வந்தது. படம் மிகப்பெரிய வெற்றியடைய படக்குழுவினர் சக்சஸ் பார்ட்டி கொண்டாடியுள்ளார்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத், சிவகார்த்திகேயன் என பலர் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.