சிவகார்த்திகேயன், சல்மான் கானை தொடர்ந்து சூப்பர்ஸ்டாரை இயக்கும் ஏ.ஆர். முருகதாஸ்! லேட்டஸ்ட் அப்டேட்
ஏ.ஆர். முருகதாஸ்
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் இயக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 23 திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், அதே சமயத்தில் சல்மான் கானின் சிக்கந்தர் படத்தையும் முருகதாஸ் இயக்கி வருகிறார்.

புதிய படத்தின் அப்டேட்
இந்த நிலையில், அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ள படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. முருகதாஸ் கேரியரில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று கஜினி. தமிழில் சூர்யா நடித்திருந்த இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு, அதில் பாலிவுட் சினிமாவின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான அமீர் கான் ஹீரோவாக நடித்திருந்தார்.

கஜினி படத்தின் இரண்டாம் பாகம் இந்தியில் உருவாகவுள்ளதாம். அதற்கான பேச்சு வார்த்தை அமீர் கான் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இடையே நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan