கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய சொகுசு கார் வாங்கிய இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.. புகைப்படத்துடன் இதோ
ஏ.ஆர். முருகதாஸ்
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ள இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். துப்பாக்கி, கத்தி, கஜினி, ரமணா, தீனா என நம்மால் மறக்க முடியாத பல சூப்பர்ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

இவர் இயக்கத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். எஸ்.கே. 22 என இப்படத்திற்கு தற்போது ஒர்க்கிங் டைட்டில் வைத்துள்ளனர். விரைவில் இப்படத்தின் தலைப்பு வெளியிடப்படும் என்கின்றனர்.

இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. ஆனால், அதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.
புதிய கார்
இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் புதிய BMW X7 காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை ரூ. 1.26 கோடி முதல் ரூ. 1.40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. காரை வாங்கிய பின் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ஏ.ஆர். முருகதாஸ் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..



ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri