சிவகார்த்திகேயனை தொடர்ந்து 57 வயது நடிகருடன் இணையும் ஏ.ஆர். முருகதாஸ்.. படத்தின் பட்ஜெட் மட்டுமே ரூ. 400 கோடியா
சிவகார்த்திகேயன் - முருகதாஸ்
ஏ.ஆர். முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவுள்ளார். முதல் முறையாக இவர்களுடைய கூட்டணி இணைகிறது. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. கத்தி மற்றும் துப்பாக்கி படங்களின் பாணியில் இப்படம் இருக்கும் என திரை வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
புதிய கூட்டணி
இந்நிலையில், சிவகார்த்திகேயன் படத்தை முடித்தவுடன் பாலிவுட் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சல்மான் கானுடன் இணையப்போகிறாராம் ஏ.ஆர். முருகதாஸ். இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறார் என கூறப்படுகிறது.
விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் இப்படத்தின் மொத்த பட்ஜெட் மட்டுமே ரூ. 400 கோடி இருக்கும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.