ஏ.ஆர். ரகுமான் இசைக் கச்சேரி நம்பி பணத்தை இழந்து ரசிகர்கள்- நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் விளக்கம்
ஏ.ஆர்.ரகுமான்
எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறி ஒட்டுமொத்த உலக மக்களின் அதிலும் இந்தியர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவராக திகழ்ந்து வருபவர் ஏ.ஆர்.ரகுமான்.
இவர் படங்களில் இசையமைப்பதை தாண்டி இப்போது அதிகம் இசைக் கச்சேரிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் மட்டும் இல்லை எல்லா இசையமைப்பாளர்களும் இப்போது இசைக் கச்சேரிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள் என்பதே இப்போது நடக்கும் உண்மை.
அண்மையில் ஏ.ஆர்.ரகுமானின் கச்சேரி நடந்துள்ளது. அந்நிகழ்ச்சிக்கு மொத்தமாக 35 ஆயிரம் டிக்கெட் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் விற்கப்பட்டது கிட்டத்தட்ட 2 முதல் 3 லட்சம் டிக்கெட்டுகளாம்.
இதனால் நேற்றைய கச்சேரியில் நிறைய பேர் பாதிப்படைந்துள்ளார்கள், அந்த வீடியோக்களை எல்லாம் நாமே இதற்கு முன் பதிவு செய்திருந்தோம்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்
நேற்றைய ஏ.ஆர். ரகுமான் இசைக் கச்சேரியை ஏற்பாடு செய்த ACTC Events நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் நேற்றைய நிகழ்ச்சி பெரிய அளவில் வெற்றிப் பெற்றுள்ளது.
அதிக கூட்டத்தால் இதில் கலந்துகொள்ள முடியாமல் போனவர்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளனர்.
Grateful to Chennai and the legendary @arrahman Sir! The incredible response, the overwhelming crowd made our show a massive success. Those who couldn't attend on overcrowding, Our sincere apologies. We take full responsibility and accountable. We are with you. #MarakkumaNenjam
— ACTC Events (@actcevents) September 11, 2023
அதேபோல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று டிக்கெட் இருந்தும் நிகழ்ச்சியை காண முடியாதவர்கள் டிக்கெட்டை போட்டோ எடுத்து அனுப்புமாறும், நாங்கள் உதவுகிறோம் என்றும் பதிவிட்டுள்ளார்.
Dearest Chennai Makkale, those of you who purchased tickets and weren’t able to enter owing to unfortunate circumstances, please do share a copy of your ticket purchase to arr4chennai@btos.in along with your grievances. Our team will respond asap?@BToSproductions @actcevents
— A.R.Rahman (@arrahman) September 11, 2023