ஏ.ஆர்.ரஹ்மான் மகள்கள் வாங்கிய சொகுசு கார் விலை இத்தனை கோடியா
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர். அவர் தற்சமயம் தென்னிந்திய படங்களுக்கு தான் அதிகம் இசையமைத்து வருகிறார். அடுத்து ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் உள்ளிட்ட பல படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். அவர்களும் தற்போது இசை துறையில் தான் பயணித்து வருகின்றனர்.
புது கார்
சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இரண்டு மகள்களும் சேர்ந்து ஒரு சொகுசு கார் வாங்கி இருக்கிறார்கள். அது சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் கார் என ரஹ்மான் தெரிவித்து இருந்தார்.
அந்த கார் Porsche நிறுவனத்தின் தயாரிப்பாகும், அதன் விலை சுமார் 2 கோடி ரூபாயை விட அதிகம் என கூறப்படுகிறது.
ரஹ்மானின் மகள்கள் அந்த கார் முன்பு நின்று எடுத்திருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Also Read: ஹீரோயின் ஆன பிக் பாஸ் சுருதி! படத்தில் அடையாளமே தெரியலையே