PS 2 பாடல் காப்பி விவகாரம்.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 கோடி அபராதம்
ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் பிரபலமான இசையமைப்பாளர். அவரது பாடல்களுக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
ரஹ்மான் தற்போது காப்பிரைட் சர்ச்சையில் சிக்கி இருக்கும் நிலையில் நீதிமன்றத்தால் 2 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.
PS 2 பாடல்
பொன்னியின் செல்வன் 2 படத்தில் வரும் வீர ராஜ வீரா பாடலுக்கு எதிராக Ustad Faiyaz Wasifuddin Dagar என்பவரை வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
Ustad N Faiyazuddin Dagar மற்றும் Ustad Zahiruddin Dagar ஆகியோர் உருவாக்கிய சிவா ஸ்துதி பாடலை அப்படியே பயன்படுத்தி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது.
அந்த பாடலை inspire ஆகி உருவாக்கியதாக ரஹ்மான் தரப்பு கூறும் நிலையில், அந்த பாடலில் வரிகளை மட்டும் மாற்றங்கள் செய்து அப்படியே பயன்படுத்தி இருப்பதாக டெல்லி நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
அதனால் தற்போது ஓடிடி தளங்களில் "Composition based on Shiva Stuti by late Ustad N Faiyazuddin Dagar and late Ustad Zahiruddin Dagar" என ஒரு slide இணைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
மேலும் 2 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும், 2 லட்சம் ரூபாய் Dagar குடும்பத்தின் வழக்கு செலவுக்காக கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.